A.K.M. Ramzy / 2021 மார்ச் 02 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகம்
கடந்த மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும் மொத்தம் 15,75,620 வாக்குகளைப் பெற்றனர்.
இந்நிலையில், சற்று கூடுதல் உழைப்பைச் செலுத்தினால் வெற்றி பெறலாம் என்பதால், சட்டப்பேரவைத் தேர்தலில் கோவையில் கமல்ஹாசன் போட்டியிட வேண்டும் என மக்கள் நீதி மய்ய செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்து, அவரிடம் நேற்றுமுன்தினம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் கூறும்போது, "கடந்த மக்களவைத் தேர்தலில் மற்ற இடங்களைக் காட்டிலும் கோவையிலும், சென்னையிலும் நாங்கள் பெற்ற வாக்குசதவீதம் அதிகம்.
கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தமுள்ள 275 வாக்குச்சாவடிகளில் 1,47,864 வாக்குகள் பதிவாகின. இவற்றில் 23,838 வாக்குகள் பெற்று, மக்கள் நீதி மய்யம் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு, வெற்றிபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனைவிட, மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு 28 வாக்குச் சாவடிகளில் அதிக வாக்குகள் கிடைத்தன. அதேபோல, அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு, இரண்டாமிடம் பிடித்த பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனைவிட 4 வாக்குச் சாவடிகளில் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.
5 வாக்குச்சாவடிகளில் பாஜகவுக்கு இணையாக வாக்குகள் கிடைத்துள்ளன. பல வாக்குச்சாவடிகளில் சராசரியாக 10 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன.
எனவே, கோவை (தெற்கு) அல்லது கோவை நகரில் உள்ள மற்ற 3 தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுமாறு கமல்ஹாசனிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். எனினும், அவர் இறுதி முடிவு எடுப்பார்" என்றனர்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago