A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 02 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
காரைக்குடி
சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியதால் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை காலம் முடிந்து, சசிகலா விடுதலையானார். மேலும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இருதினங்களுக்கு முன்பு குணமடைந்து பெங்களூருவில் உள்ள விடுதியில் தங்கியுள்ளார்.
இதற்கிடையில் அதிமுக, அமமுக இணையும் என்றும், அதிமுகவை சசிகலா மீட்டெடுப்பார் என்றும் சசிகலா ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் தேவகேட்டை, கண்ணங்குடி ,சாக்கோட்டை பகுதிகளில் ‘தமிழகத்தின் எதிர்காலமே, துரோகத்தை வென்றெடுக்க வரும் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர், எங்களின் ராஜ மாதாவே ,’ என சசிகலாவை வரவேற்று அதிமுகவைச் சேர்ந்த கண்ணங்குடி ஒன்றிய அம்மா பேரவை துனைத்தலைவர் பன்னீர்செல்வம், தேவகோட்டை முன்னாள் ஒன்றிய இளைஞர் பாசறை இணைச் செயலாளர் கலையரசன் , முன்னாள் துணைத் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் இணைந்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
இவர்களைத் தவிர, அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட அரசு கூடுதல் வழக்கறிஞர் கண்ணன் என்பவரும் சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டியுள்ளார்.
காரைக்குடி தொகுதியில் அதிமுக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் போட்டியிட காய் நகர்த்தி வரும் நிலையில், அத்தொகுதிக்குட்பட்ட பகுதியில் சசிகலாவிற்கு ஆதரவாக அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
22 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
8 hours ago
9 hours ago