Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 ஒக்டோபர் 23 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொழில்துறையில் பயன்படுத்தப்படும் மதுபானங்களை ஒழுங்குபடுத்தவும் வரி விதிக்கவும் மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது என, 9 பேர் அடங்கிய நீதிபதிகள் குழாம், புதன்கிழமை (23), ஒருமித்த கருத்துடன் தீர்ப்பளித்துள்ளது.
தொழில்துறை மதுபான உற்பத்தியில் மத்திய அரசுக்கு ஒழுங்குமுறை அதிகாரம் இருப்பதாக, 1997ஆம் ஆண்டு 7 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்றம் அமர்வு தீர்ப்பளித்தது. இதையடுத்து, இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது.
தொழிலக பயன்பாட்டு மதுபானம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்தன.
இந்நிலையில், தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், அபய் எஸ், பிவி நாகரத்னா, பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா, உஜ்ஜல் புயான், சதீஷ் சந்திர சர்மா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகிய 9 பேர் அடங்கிய நீதிபதி குழாம், இன்று, மேற்கண்டவாறு தீர்ப்பளித்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
16 minute ago
20 minute ago
32 minute ago