2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சத்ய சாய் பாபா பிறந்த நாள் இன்று

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 23 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சத்ய சாய் பாபா பிறந்த நாள் இன்றாகும். ஆந்திர மாநிலம் புட்ட பர்த்தியில், 1926 நவம்பர் 23ஆம் திகதி  பிறந்தவர், சத்யநாராயண ராஜு. தன்னை, 'ஷீரடி சாய் பாபாவின் அவதாரம்' என அறிவித்தார்;

அன்றிலிருந்து, 'சத்ய சாய் பாபா' என அழைக்கப்பட்டார். புட்டபர்த்தியில், 'பிரசாந்தி நிலையம்' என்ற ஆசிரமம் கட்டினார்.

'சத்ய சாய்' அறக்கட்டளை மூலம், நாடு முழுதும் கோவில், கல்வி நிறுவனம், மருத்துவமனை ஆகியவற்றை நிறுவினார்.

உலகம் முழுதும், 136 நாடுகளில், 1,300 சேவை மையங்களை உருவாக்கினார். அவுஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட, 33 நாடுகளில் இலவச பாடசாலைகளை ஆரம்பித்தார். இராயலசீமாவில், 12 இலட்சம் பேர் பயன்பெறும் வகையில், 'மெகா' குடிநீர் திட்டத்தை நிறைவேற்றினார்.

ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நீரை, சென்னைக்கு கொண்டு வரும், 'தெலுங்கு கங்கை' திட்டத்துக்கு கால்வாய் கட்ட, 200 கோடி ரூபாய் வழங்கினார். 2011 ஏப்ரல் 24ல், தன் 85வது வயதில் இயற்கை எய்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .