2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

சபரிமலையில் கூடுதல் கட்டுப்பாடு!

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 10 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சபரிமலை,

சபரிமலையில் பணியாற்றுபவர்கள் 2 வாரங்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

சபரிமலையில் தொற்றுப் பரவுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் அங்கு பணியாற்றுபவர்களுக்கு மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்து சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

சபரிமலை, பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் பணியில் உள்ள அரசு ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் உள்ள பொலிஸார், அர்ச்சகர்கள் மற்றும் ஹோட்டல்கள், நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உட்பட அனைவரும் 14 நாள்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து, அதற்கான சான்றிதழை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

கொரோனா இல்லை என்பதற்கான நெகட்டிவ் சான்றிதழ் இல்லாதவர்கள் உடனடியாக சபரிமலை பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். அவ்வப்போது கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வசதியாக சபரிமலை, பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .