2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

சபரிமலையில் கொரோனா தொற்று அபாயம்!

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 17 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சபரிமலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைக் கருத்திற் கொண்டு, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கேரள சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி எதிர்வரும்  26 ஆம் திகதி மண்டல பூஜைக்குப் பிறகு கோவிலுக்கு வரும் பக்தர்கள், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:

ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல-மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் சபரிமலை கோவில் திறக்கப்பட்டது. அதன் பின்னர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் 51 பேர், கோவில் பணியாளர்கள் 245 பேர் உட்பட 299 பேருக்கு கொரோனா தொற்றுக்குள்ளானது  தெரியவந்தது. கோவிலை திறந்தபின் இரு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.  

எனவே,பக்தர்கள் அனைவரும் தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இதேவேளை,காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்கவும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .