A.K.M. Ramzy / 2021 ஜனவரி 10 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சபரிமலை: ''சபரிமலை வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால், கொரோனா குறைந்த பின், மாதாந்திர நடை திறக்கும் நாள்களை அதிகரிக்க தந்திரியுடன் ஆலோசிக்கப்படும்,'' என, தேவசம்போர்டு தலைவர் வாசு கூறினார்.
சபரிமலையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:மண்டல - மகரவிளக்கு காலம் நிறைவு கட்டத்தை நெருங்கிஉள்ளது. மண்டல காலத்தில் தேவசம்போர்டு ஊழியர்கள், பொலிஸார், பக்தர்கள் என, 423 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சபரிமலை நிர்வாக அதிகாரிக்கு கொரோனா உறுதியானது. இதனால், சபரிமலையை தடை செய்யப்பட்ட பாதுகாப்பு பகுதியாக அறிவிக்க வேண்டும் என, கேரள சுகாதார துறை கூறியது. ஆனால், சூழ்நிலையை தேவசம்போர்டு விளக்கியதால் அது தவிர்க்கப்பட்டது. பொருளாதார நெருக்கடிதேவசம்போர்டின் வருமானம் சபரிமலையை நம்பியுள்ளது.
மார்ச் முதல் சபரிமலை வருமானம் நின்று விட்டதால், கடுமையான பொருளாதார நெருக்கடி உள்ளது. மாநில அரசு, 70 கோடி ரூபாய் மானியம் தந்துள்ளது. சம்பளம் மற்றும் செலவினங்களுக்காக மாதம், 50 கோடி ரூபாய் வேண்டும்.மகர ஜோதி ஜனவரி 13 ஆம் திகதி இரவு வரை வரும் பக்தர்கள், தரிசனத்துக்கு பின் திரும்பி விட வேண்டும். 14 ஆம் திகதி வரும், 5,000 பக்தர்கள் மகர ஜோதி தரிசனம் நடத்தி செல்ல அனுமதிக்கப்படுவர்.
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026