A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 26 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சபரிமலை,
சபரிமலை கோவிலில் நேற்று சுவாமி ஐயப்பன் தங்க அங்கியில் காட்சி அளித்தார். சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை இன்று நடக்கிறது.மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 15ஆம் திகதி திறக்கப்பட்டது.
பிறகு மறுநாள் முதல் தினமும் பூஜை நடந்து வருகிறது. கணபதி ஹோமம், நெய்ய பிஷேகம், உஷபூஜை, கலசாபிஷேகம், களபாபிஷேகம், உச்ச பூஜை, மாலை தீபாராதனை, படி பூஜை, உதயாஸ்தமன பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
கொரோனா பரவல் காரணமாக இந்த வருடம் குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். விழாவில் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை இன்று (சனிக்கிழமை) மதியம் நடக்கிறது. ஒவ்வொரு வருடமும் மண்டல பூஜை அன்று சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுவது வழக்கம்.
ஊர்வலமாக தங்க அங்கி நேற்று மாலை 5.50 மணிக்கு சன்னிதானம் வந்து சேர்ந்தது. அதனை, 18ஆம் படிக்கு கீழ் தந்திரி கண்டரரு ராஜீவரு, மேல் சாந்தி ஜெயராஜ் போற்றி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அதை தொடர்ந்து 18ஆம் படி வழியாக தங்க அங்கி கோவில் கருவறைக்குள் கொண்டு செல்லப்பட்டது.
அங்கு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு சுவாமி ஐயப்பனுக்கு அணிவித்து 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago