A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 15 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
மானியமில்லா சமையல் சிலிண்டர் விலை ஏற்றமானது, மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் கழுத்தறுப்பு என மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெற்றோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், மானியமில்லா சமையல் சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த 4ஆம் திகதி ரூ.25 உயர்த்தப்பட்ட நிலையில், இன்று மேலும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது ஒரு சமையல் சிலிண்டர் விலை ரூ.785 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இது தொடர்பாக மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசனின் டுவிட்டர் பதிவு: பெற்றோல்,டீசல் விலை அன்றாடம் உயர்ந்துகொண்டே இருக்கிறது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ஒரே மாதத்தில் ரூ.75 உயர்ந்துள்ளது. மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் கழத்தறுப்பு இது. இந்த அக்கறையற்ற போக்கினால் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயர்ந்து ஏழ்மை அதிகரிக்கும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026