2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சரத்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 17 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சென்னை

நடிகர் சரத்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை, பொலிஸார்  எச்சரித்து அனுப்பினர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கொட்டிவாக்கத்தில், நடிகர் சரத்குமார் வீடு உள்ளது. நேற்று முன்தினம் இரவு, பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட நபர், சரத்குமார் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.நீலாங்கரை பொலிஸார்  மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், சரத்குமார் வீட்டில் சோதனை நடத்தியதில் புரளி என தெரிந்தது.

மிரட்டல் விடுத்த நபர், விழுப்புரம் மாவட்டம் கூனிமேடு பகுதியைச் சேர்ந்த புவனேஷ், 20, என்பதும், ஏற்கனவே நடிகர் அஜித் உள்ளிட்டோர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதும் தெரிய வந்தது. புவனேஷ், சற்று மனநலம் பாதித்தவர் என்பதால், பொலிஸார் அவரது பெற்றோரை அழைத்து எச்சரித்து அனுப்பினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .