2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

சித்ராவின் மரணத்துக்கு கணவரே காரணம் !

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 10 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை

 தனது மகளை ஹேம்நாத் அடித்து கொலை செய்திருக்கலாம் என சித்ராவின் தாயார் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று நசரத் பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட விடுதியின் மேலாளர் உட்பட 3பேரிடம் நசரத்பேட்டை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவரிடம் இரண்டாவது நாளாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சித்ராவின் தாயார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

"எனது மகளை ஹேம்நாத் அடித்து கொலை செய்திருக்கலாம் என பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் தனது மகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை இல்லை; தைரியமானவர். 

ஹேம்நாத் நல்லவர் என ஏமாந்துவிட்டோம். மகளின் மரணத்துக்கு காரணமானவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் . சித்ரா தாயாரின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .