A.K.M. Ramzy / 2021 மே 24 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிக்கமகளூர்
விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞரை, மற்றொரு நபரின் சிறுநீரை குடிக்க கட்டாயப்படுத்திய சப் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிக்கமகளூரு, கிருகுன்டா கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரைக் காணவில்லை என, கோனிபீடு பொலிஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து இதே கிராமத்தை சேர்ந்த புனித் என்ற வாலிபரை விசாரணைக்காக பொலிஸார் அழைத்துச் சென்று வாலிபரை தடுத்து வைத்தனர்.
பின்னர் பிணையில் வெளியே வந்த புனித், விசாரணையின் போது தனக்கு சப் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் ஹொசகேரி செய்த சித்திரவதை குறித்துபொலிஸ் மனித உரிமை கமிஷனுக்கும் கடிதம் மூலம் புகார் தெரிவித்தார்.
இது குறித்து புனித் கூறுகையில், ''விசாரணையின் போது என்னை தலைகீழாக கட்டி அடித்தனர். திருட்டு வழக்கில் கைதான சேத்தன் என்பவரை சிறுநீர் கழிக்க வைத்து அதை என்னை குடிக்க வற்புறுத்தினார்.'' தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கினார். குடிக்க தண்ணீர் கேட்டபோது பாட்டிலிலிருந்து இரண்டு சொட்டு தண்ணீர் மட்டுமே ஊற்றினர்,'' என்றார்.
இத்தகவல் கிடைத்தவுடன், சப் - இன்ஸ்பெக்டர் அர்ஜுன் உடனடியாக எஸ்.பி., அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார்.
இதை ஏற்காத பல்வேறு அமைப்பினர், அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .