A.K.M. Ramzy / 2020 நவம்பர் 15 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுச்சேரி
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாத்து மேய்ப்பதற்காக 5 சிறுமிகளை பண்ணையில் கொத்தடிமைகளாக வேலைக்கு வைத்து, அவர்களை பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் பாலியல் கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து தேசிய குந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினார்கள்.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தற்போது 16 வயது சிறார் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தேசிய அளவிலான கவனத்தை ஈர்த்துள்ளது. எனவே தேசிய குழந்தைகள் நலப் பாதுகாப்பு ஆணையம் தாமாகவே இந்த விவகாரத்தை விசாரித்து வருகிறது. இதில், முதல் கட்டமாக இதுவரையில் இந்த விவகாரத்தில் பொலிஸார் எந்த அளவுக்கு இந்த வழக்கை விசாரணை செய்துள்ளனர். அடுத்ததாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எந்த மாதிரியான பாதுகாப்பும், பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும்.இறுதியாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது எத்தகைய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து எங்கள் ஆணையம் கவனம் செலுத்தும்.
இதுவரை இந்த வழக்கை விசாரித்ததில்; குழந்தைகளை ரூபாய் 30,00க்கு விற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. புதுச்சேரி குழந்தைகள் நலக் குழு ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில் சம்பந்தப்பட்ட குழந்தைகள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப் பட்டதாக தெரிய வந்துள்ளது.
தற்போது இந்தக் குழந்தைகள் அனைவரும் மிகவும் பாதுகாப் பான இடத்தில் வைக்கப்பட்டு உள்ளனர். பொலிஸ் விசாரணை சென்று கொண்டிருக்கிறது. இதுவரை இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் நாள்களில் மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .