2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

சிறுமியிடம் பிரசாதம் தருவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 28 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒடிசாவில் நபரொருவர் கோயிலுக்குச் சென்ற 12 வயது சிறுமியிடம் பிரசாதம் தருவதாக கூறி அழைத்து சென்று அவரைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கின் தீர்ப்பு அண்மையில் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஒடிசாவைச் சேர்ந்த 12 வயதான  சிறுமியொருவர் கோயிலுக்கு சென்றபோது அங்கே இருந்த 52 வயதான நபரொருவர் அச்சிறுமியிடம்  பிரசாதம் தருவதாக அழைத்துச் சென்று  பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் இதனையடுத்து அச்சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவிக்க அவர்கள்  பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன் குறித்த புகாரின் அடிப்படையில் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரையும்   பொலிஸார் கைது செய்தனர்.

இந்நிலையில்இவ் வழக்கின் தீர்ப்பு நேற்றைய தினம் வெளியானது. அதில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X