2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

சிறுவன் மீது கூட்டுப் பாலியல் வன்புணர்வு

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 28 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மைக்காலமாகப்  பெண்கள், சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள், குறிப்பாக கூட்டுப்  பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள்  டெல்லியில் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில்,அண்மையில் டெல்லியில்  12 வயதுச் சிறுவனை   நான்கு ஆண்கள் கடுமையாகத் தாக்கி,  கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து, டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மலிவால் தனது ட்விட்டர் பதிவில்,"டெல்லியில் சிறுவனுக்கு கூடப்  பாதுகாப்பு இல்லை.  12 வயதுச் சிறுவனை நான்கு பேர் கொடூரமான முறையில் வன்புணர்வு செய்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, குச்சியால் பலமாகத்  தாக்கிக் கொலை முயற்சியிலும் ஈடுப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளோம்" என்றார்.

இந்நிலையில் ," இதுதொடர்பாக, ஒருவரைப்  பொலிஸார் கைது செய்துள்ளனர் எனவும்,  மீதமுள்ள மூன்று பேரைத் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X