2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சிறைக்குச் செல்ல ஆசை!

A.K.M. Ramzy   / 2021 செப்டெம்பர் 22 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை:

சிறைக்குச் செல்வது சிறந்ததல்ல என்பது, யாரும் தெரிந்த விடயம். ஆனால் மனிதர்களுள் விசித்திரமானவர்களும் இருக்கின்றனர். இவ்வாறான சம்பங்களால்,மனிதனிடையே காணப்படும் ஒருவகையான சிந்தனையின் வெளிப்பாடென்றே கூறலாம்.

அதாவது,ஆவடி அடுத்த திருநின்றவூர், பிரகாஷ் நகரைச் சேர்ந்த 49 வயதையுடைய  ஒருவர், இரவு மதுபோதையில், திருநின்றவூர் பகுதியில் உள்ள, ஏழு ஏ.டி.எம்., இயந்திரங்களின் கண்ணாடிகளை சுத்தியலால் உடைத்து உள்ளார்.

இயந்திரங்களின் கண்ணாடிகளை சுத்தியலால் உடைத்த  பின், திருநின்றவூர் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று  சரணடைந்துள்ளார்.

பொலிஸார் இவரிடம் நடாத்திய விசாரணையில், ' தான் சிறை செல்ல ஆசைப்பட்டு, ஏ.டி.எம்., இயந்திரகளை உடைத்ததாக' தெரிவித்துள்ளார்.

வினோத ஆசையில் ஏ.டி.எம்., இயந்திரகளை உடைத்து, தானே பொலிஸில் சரண் அடைந்த பிரகாஷிடம் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .