2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

‘சில்லி சிக்கன்’ உண்ட 40 பேர் மீது வழக்குப் பதிவு

Ilango Bharathy   / 2022 ஜனவரி 20 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘சில்லி சிக்கன்‘ எனப்படும் கோழி இறைச்சியினால் செய்யப்பட்ட உணவை உட்கொண்ட 40 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.

தமிழகத்தில் கொரோனாத் தொற்றுப் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், தருமபுரி மாவட்டம்  முக்கல்நாய்க்கன்பட்டி கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஒரு கிலோகிராம் ‘ சில்லி சிக்கன்‘ உட்கொள்ளும் போட்டி நடத்தப்பட்டுள்ளது.

 பந்தல் அமைத்து ஒரே இடத்தில் 15 கிலோகிராம்  கோழி இறைச்சியை 15 பேருக்கு பரிமாறி போட்டி நடத்தப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியின்றி அமர்ந்து ஒரு கிலோகிராம்  சில்லி சிக்கனை இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு உட்கொண்டுள்ளனர்.

லும் இப் போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்துள்ள நிலையில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதாகவும், தொற்றுப் பரவும் வகையில் கூட்டத்தை கூட்டியதாகயும் விழா நடத்தியோர் மற்றும் போட்டியில் பங்கேற்றவர்கள் உள்ளிட்ட 40 பேர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .