Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 செப்டெம்பர் 30 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவின் ஆத்திரமூட்டும் நடத்தை மற்றும் ஒருதலைப்பட்ச முயற்சிகளாலேயே, லடாக் பகுதியில் அமைதிக்கு எதிரான நிலைமையும், மலைப்பகுதி பிராந்திய கல்வான் பள்ளத்தாக்கில் மோதல்கள் ஏற்படவும் காரணமாகியதாக இந்தியா கூறியது.
கல்வான் பள்ளத்தாக்கு சம்பவம் நடைபெற்றதற்கு, இந்தியா எல்லா ஒப்பந்தங்களையும் மீறியதும் மற்றும் சீன பிரதேசத்தை ஆக்கிரமித்தமையுமே காரணம் என்று சீன வெளியுறவு அமைச்சு செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட கருத்துக்கு பதிலாகவே இந்தியாவின் இந்த கருத்து அமைந்தது.
இத்தகைய அறிக்கைகளை நாங்கள் மறுக்கிறோம். எங்களுடைய நிலைமையானது, கடந்த வருடம் லடாக்கில் இடம்பெற்ற சம்பவம் பாரதூரமானது. அது ஓர் ஆத்திரமூட்டும் நடத்தை மற்றும் இரண்டு பக்க உறவுகளையும் பாதிக்கச்செய்யும் சீனாவின் ஒருதலைப்பட்ச முயற்சிகளாகும். இதன்பயனாக அமைதியின்மை ஏற்பட்டது. இந்த நிகழ்வானது இருபக்க உறவுகளையும் பாதிக்கச்செய்தது என்று, வெளியுறவு அமைச்சு செய்தித் தொடர்பாளர் ஷஅரிண்டம் பக்ச்சி| ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
சீன வெளியுறவு அமைச்சருடன், இம்மாத முற்பகுதியில் நடத்திய சந்திப்பின் போது, இருபக்க ஒப்பந்தங்களையும், நெறிமுறைகளையும் சீனா கடைபிடிக்கவேண்டுமென்றே நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்று வெளியுறவு அலுவல்கள் அமைச்சர் கூறியிருந்தார்.
கடந்த வருடம் ஜூன் மாதம் 15ஆம் திகதி, கல்வான் பள்ளத்தாக்கில் சீன துருப்புக்களுடன் நடைபெற்ற மோதல்களின்போது, இந்திய இராணுவ வீரர்கள், 20 பேர் கொல்லப்பட்டனர். பல தசாப்தங்களில் நடைபெற்ற இருதரப்புக்கும் இடையிலான மோதல்களில் பாரதூரமான தாக்குதல் இதுவாகும்.
பெப்ரவரி மாதத்தில் இந்திய இராணுவத்துடனான மோதல்களில் ஐந்து சீன அதிகாரிகளும், வீரர்களும் கொல்லப்பட்டதாக சீனா உத்தியோக பூர்வமாக அறிவித்தது. இருப்பினும் பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்குமென்று பரவலாக நம்பப்படுகிறது.
47 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago