Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 07 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
அசாமில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் வெள்ளம் சூழ்ந்ததில், 15 தொழிலாளர்கள் சிக்கி கொண்டுள்ளனர்.
அசாமின் மலைப்பிரதேச மாவட்டங்களில் ஒன்றான திமா ஹசாவோவில் உள்ளடங்கிய பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயற்பட்டு வருகிறது.
இதில், வேலை செய்து வந்த தொழிலாளர்களில் 15 பேர் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
அவர்கள் வேலை செய்துகொண்டிருந்த போது, சுரங்கத்துக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. ஒரு சிலர் சுரங்கத்தில் இருந்து தப்பி வெளியே வந்துள்ளனர்.
தப்பி வந்த தொழிலாளர்கள், சுரங்க உரிமையாளர் மற்றும் உள்ளூர் பொலிஸாரிடம் சுரங்க விபத்து பற்றி கூறியுள்ளனர்.
இதனை உறுதி செய்துள்ள முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா, மீட்பு பணியில் மாநில மற்றும் தேசிய பேரிடர் பொறுப்பு படை அதிகாரிகள் சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என கூறியுள்ளார்.
இராணுவ உதவியும் கோரப்பட்டுள்ளது எனவும், அவர் கூறியுள்ளார்.
இந்த சுரங்கம் நகரில் இருந்து தொலைவில், உட்பகுதியில் அமைந்துள்ளது. இதனை பயன்படுத்தி கொண்டு சட்டவிரோத வகையில் சுரங்கம் செயற்பட்டு வந்துள்ளது என, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
3 hours ago