Freelancer / 2025 ஜனவரி 06 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேரளாவுக்கு, இன்று (6) காலை 6.15 மணியளவில், சுற்றுலா பயணிகளுடன் வந்த அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒரு பெண் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளா - மாவெள்ளிக்கரா பகுதியில் இருந்து 34 சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று தஞ்சாவூர் பகுதிக்கு சென்றது. இதன்பின்னர் சுற்றுலா தலங்களை அவர்கள் பார்வையிட்டதும், சுற்றுலா பயணிகளுடன் மீண்டும் மாவெள்ளிக்கரா நோக்கி அந்த பஸ் திரும்பி வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில், இடுக்கி மாவட்டத்தின் குட்டிக்கானம் மற்றும் முண்டகாயம் ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் புள்ளுப்பரா என்ற இடத்துக்கு அருகே சென்றபோது பஸ், திடீரென 30 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பெண் ஒருவர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
மேலும், விபத்தில் காயமடைந்த நபர்கள் அருகேயுள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளும் தொடர்ந்து வருகின்றன.
இதில், 2 பயணிகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக, கூறப்படுகிறது.
51 minute ago
56 minute ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
56 minute ago
17 Dec 2025
17 Dec 2025