A.K.M. Ramzy / 2021 மார்ச் 03 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடில்லி:
காங்கிரஸில் உள்கட்சி தேர்தல் நடத்தியதால் சொந்தக் கட்சியினரே என்னை வசைபாடினர் என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.,யுமான ராகுல் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: காங்கிரஸ் கட்சியில் மாணவர் இளைஞர் அணி தேர்தல் நடத்தப்பட்ட போது சொந்தக் கட்சியினரே என்னை வசைபாடினர்.காங்கிரசில் உள்கட்சி ஜனநாயகம் என கேட்பவர்கள் பா.ஜ. உள்ளிட்ட கட்சிகளை கேட்பதில்லை.
ஜனநாயக அமைப்புகளில் ஆர். எஸ். எஸ் தங்களின் ஆட்களையே நியமிக்கிறது. தேர்தலில் பா.ஜ.வை தோற்கடித்தாலும் அரசு அமைப்புகளில் ஆர்.எஸ்.எஸ் நபர்களை அப்புறப்படுத்த முடியாது. புதுச்சேரியில் முறைப்படி தேர்ந்தெடுத்த அரசை செயல்படவிடாமல் ஜனநாயக நெறிமுறைகள் தகர்க்கப்பட்டது. ஜனநாயக நடைமுறைகளைப் பின்பற்றாமல் நடந்து கொண்டஆளுநர் கிரண்பேடியும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்தவர் தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026