Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2021 நவம்பர் 29 , மு.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி
முன்னாள் கிரிக்கெட் வீரரும்,பாரதிய ஜனதா எம்.பியுமான கௌதம் கம்பீருக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர், தற்போது பாரதிய ஜனதா - எம்.பியாகவுள்ளார். இவருக்கு கடந்த வாரம் இரண்டு முறை 'ஈமெயில்' வாயிலாக கொலை மிரட்டல் வந்தது. 'ஐ.எஸ்.ஐ.எஸ்., காஷ்மீர்' என்ற ஈமெயில் முகவரியில் இருந்து மிரட்டல் வந்திருப்பதையும், மிரட்டல் விடுத்தவர் பாகிஸ்தானின் சிந்த் பல்கலை மாணவர் என்பதையும் மத்திய புலனாய்வு பிரிவு பொலிஸ் உதவியுடன் டெல்லி பொலிஸார் கண்டுபிடித்தனர்.
விசாரணை நடந்து வரும் நிலையில் கௌதம் கம்பீருக்கு நேற்றும் ஒரு ஈமெயில் வந்தது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:டெல்லி பொலிஸார் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. டெல்லி பொலிஸிலும் எங்கள் உளவாளிகள் இருக்கின்றனர். பொலிஸாரின் அத்தனை நடவடிக்கையும் எங்களுக்கு தெரியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
3 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
8 hours ago