Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2022 ஜனவரி 27 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாள் ஒன்றுக்கு முப்பதாயிரத்துக்கு மேல் பதிவாகிவந்த நிலையில் நேற்றைய தினம் சற்று குறைந்து 29,976 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 5973 பேருக்கு தொற்ற உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக கோவையில் 3740, செங்கல்பட்டில் 1883 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தற்போதுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 31ஆம் திகதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
பாதிப்பு குறையத் தொடங்கினால் ஞாயிறு முழு ஊரடங்கு தேவை இருக்காது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். எனவே ஞாயிறு முழு ஊரடங்கு இந்த வாரம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago