A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 06 , மு.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐந்தாவது நாளாக தங்கம் விலையானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இது உண்மையில் முதலீட்டாளர்களுக்கு மிக நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆபரணத் தங்கத்தின் விலை சரிவு என்பது, தங்கம் வாங்க சரியான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
இதேபோல் உலக நாடுகளின் பங்குச்சந்தையும் சிறப்பான வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், சரிவில் இருந்து முதலீட்டைக் காப்பாற்றத் தங்கத்தின் மீது செய்யப்பட்ட முதலீட்டை அதிகளவில் வெளியேற்றப்பட்டுப் பங்குச் சந்தைக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதனால் இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் தங்கம் மீதான முதலீடுகள் குறைந்து தங்கம் விலை குறைய முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 42 ரூபாய் குறைந்து 4,441 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 336 ரூபாய் குறைந்து 35,528 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. பட்ஜெட்டில் இறக்குமதி வரி குறைக்கப்பட்டதையடுத்து, தங்கம் விலை குறைந்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026