A.K.M. Ramzy / 2020 நவம்பர் 10 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,248 குறைந்து ரூ.38,128 இக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஓரிரு மாதங்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது.
22 கரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,248 குறைந்து ரூ.38,128இக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 156 குறைந்து ரூ.4,766இக்கு விற்பனையாகி றது.
அதேபோன்று, வெள்ளியின் விலை 4 ரூபாய் 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 66.90இக்கும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ. 66,900 இக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.
30 minute ago
2 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago
4 hours ago
7 hours ago