2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தட்டித் தடுமாறுகிறார் திருமாவளவன்

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 30 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை:

 பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையம் செல்ல தயாரான,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளனின், வீட்டில் மழைநீர் சூழ்ந்ததால்,  தொண்டர்களின் உதவியுடன் பார்வையாளர் அமரும் கதிரையூடாக மாறி, மாறி வந்து காரில் ஏறிச்சென்றுள்ளார்.

சென்னை வேளச்சேரி தமிழ்நாடு குடியிருப்பு காலனியில் முதலாவது அவென்யூவில் விடுதலை கட்சி தலைவர் திருமாவளவன் வீடு உள்ளது. கடந்த சில நாட்களால் பெய்து வரும் கனமழை காரணமாக அவரது வீட்டில்,சுமார் 2 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கியிருந்தது.

அதனால் தான் அணிந்திருந்த சப்பாத்து நீரில் நனையாமல் எப்படி காருக்குச் செல்வது என யோசித்தார். உடனே பார்வையாளர்கள் அமர போடப்பட்டிருந்த இரும்பு சேர் மீது ஏற , அதனை தொண்டர்களின் உதவியுடன். ஒரு வழியாக காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .