A.K.M. Ramzy / 2021 மார்ச் 03 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
சேப்பாக்கம் தொகுதியில் இருந்து போட்டியிடப் போவதில்லை என்ற திடீர் முடிவை உதயநிதி எடுத்துள்ளார். மேலும் தனது தந்தையை அரியணையில் அமர்த்துவது தான் முக்கியம் என கூறியுள்ளார்.
இது குறித்து கட்சியின் நெருங்கிய வட்டாரம் கூறியதாவது:
தந்தை ஸ்டாலின் போல் இன்னும் கட்சிப் பணி செய்து படிப்படியாக வளர விரும்புவதாகவும் , அதேபோல் தான் போட்டியிடப்போவதில்லை என்ற முடிவு குறித்து இளைஞர் அணியின் முக்கிய நிர்வாகிகளுடன் உதயநிதி பேசியிருக்கிறார் என்றும் தகவல். கட்சிக்காக உழைத்த சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அங்கீகரிக்க வேண்டும் என ஸ்டாலினிடம் உதயநிதி கூறியதாக சொல்லப்படுகிறது.
தான் எம்.எல்.ஏ பதவிக்கு போட்டியிட்டால் ஒரே தொகுதியில் பிரசாரத்துக்காக முடங்க நேரிடும் என உதயநிதி, தனது தந்தை ஸ்டாலினிடம் கூறியதாக தகவல். மேலும், உங்களை முதல்வராக்கி திமுக ஆட்சியை பிடிக்க தான் எந்த தியாகத்தையும் செய்ய தயார் எனவும் உதயநிதி பேசியதாக கூறப்படுகிறது.
ஸ்டாலின் வாரிசு அரசியல் செய்வதாக கூறிவரும் அதிமுக கூட்டணி தலைவர்களின் விமர்சனத்தை உடைக்கும் திட்டம் இது என உதயநிதி கூறிள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026