2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

தனி விமானத்தில் பறந்த ரஜினி

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உள்ளிட்டோர் நடிக்கும் படம் அண்ணாத்த. கொரோனாவால் தடைப்பட்ட இதன் படப்பிடிப்பு ரஜினியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு மீண்டும் ஆரம்பிக்கப்படாமல் இருந்தது.

 இதேவேளை,அரசியலில் களமிறங்கவுள்ள ரஜினி, அதற்கு முன்பாக இதன் படப்பிடிப்பை முடிக்கவுள்ளார்.

ரஜினி சம்பந்தமாக படக்காட்சிகள் இன்னும் படமாக்கப்படவுள்ளன. டிசம்பர் 15ஆம் திகதி  முதல் மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாக  இயக்குனர் சிவா நேற்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்க தனி விமானம் மூலம் நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத் பறந்தார். 25 நாள்களில் தன் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பை முடித்து கொடுக்க திட்டமிட் டுள்ளார்.  இடையில் புத்தாண்டு சமயத்தில் மட்டும் சென்னை வந்து செல்ல உள்ளார்.

ஐதராபாத்தில் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. படப்பிடிப்பு தளத்தில் பலத்த பாதுகாப்பு அம்சங்களுடன் நடத்த படக்குழு தயாராகி வருகிறது. கடுமையான மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்பட்ட பின்னர் தான் குழுவினர் படப்பிடிப்பில் பங்கேற்கிறார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .