2025 ஜூலை 31, வியாழக்கிழமை

’தமிழகத்தில் 2026 பா.ஜ.க. ஆட்சி’

Freelancer   / 2022 மே 20 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி  ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது என தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

எழுத்தாளர் சுப்பு எழுதியுள்ள 'திராவிட மாயை' ஆங்கில நுால் வெளியீட்டு விழா சென்னை மயிலாப்பூரில்  நடந்தது. அதில் நூலை அண்ணாமலை வெளியிட 'வின்' தொலைக்காட்சி தலைவர் தேவநாதன் யாதவ் பெற்றார்.

அங்கு அண்ணாமலை தொடர்ந்து உரையாற்றுகையில், திராவிடம் என்பது உடைந்து விட்டது. திராவிடம் என்று 70 ஆண்டுகளாக கூறி வரும் பொய்யை உடைத்து வருபவர்கள் பலர் உண்டு. குழப்பங்கள் நிறைந்தாக திராவிட கொள்கை உள்ளது.தமிழகத்தில் 2019 ஆல் தீண்டாமை அதிகம் உள்ள கிராமங்களின் எண்ணிக்கை 626 ஆகவும்; 2022ல் 400க்கும் மேற்பட்ட கிராமங்களும் இருப்பதாகவும் புள்ளிவிபரங்கள் வெளியாகின என்று தெரிவித்த அவர், ''தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ.க ஆட்சியமைக்கும் என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .