A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 11 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொள்ளாச்சி :
கட்சிக் கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் தலை கீழாக கட்டியிருந்த கொடி திடீரென இறக்கப்பட்டு மீண்டும் கனிமொழி கொடியை மீண்டும் ஏற்றிய சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில், 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற பிரசாரத்தில், தி.மு.க., எம்.பி., கனிமொழி பேசினார். அதில், கூட்டம் காண்பிக்க பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து மக்களை வாகனங்களில் அழைத்து வந்தனர். கனிமொழி பேசிக்கொண்டிருந்தபோதே, வானுக்குப் பின்னால் நின்று, கட்சி பிரமுகர்களிடம், ஆட்களை அழைத்து வந்தவர்கள் பணத்தை எண்ணி சரிபார்த்து வாங்கினர்.
எத்தனை ஆட்கள் அழைத்து வந்தோம் என்பதை கூறி, புதிய, 200 ரூபாய் நோட்டுகளை பெற்றனர். அப்போது, சில நிர்வாகிகள், 'நிருபர்கள் இருக்கிறாங்க; இங்கேயே எண்ணுற; போட்டோ எடுத்துடுவாங்க, உள்ளே வைங்கப்பா' என, திடீரெனக் குரல் வந்தது, இதையடுத்து, அவர்கள் பணத்தை பெட்டியில் வைத்து இடத்தை காலி செய்தனர்.
21 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
8 hours ago
9 hours ago