2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

தலைமறைவான நபர் 57 ஆண்டுகளுக்குப் பின் கைது

Freelancer   / 2023 செப்டெம்பர் 13 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், மாடுகளை வளர்த்து வந்தார். இவருக்கு சொந்தமான 2 எருமை மாடுகள்,  கன்றுக்குட்டி ஒன்றை கடந்த 1965-ம் ஆண்டு மர்மநபர்கள் திருடிச் சென்றிருந்தனர். இதுதொடர்பாக அவர் பொலிஸில் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டிருந்தது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகியிருந்தனர். இருவரில் ஒருவர்  2006-ம் ஆண்டு இறந்துபோனார்.

மற்றையவர்,   1965-ம் ஆண்டு கைதான போது அவருக்கு வயது 20. சில மாதத்திலேயே பிணையில் வந்த அவர்,  57 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நிலையில் 77 வயதில் கைது செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X