Freelancer / 2024 ஒக்டோபர் 28 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருப்பதியில் உள்ள வராஹ சாமி கோவில், இஸ்கான் கோவில் மற்றும் 4 ஓட்டல்களுக்கு, ஞாயிற்றுக்கிழமை (27), வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் வந்துள்ளது.
இதையடுத்து, பொலிஸார் திருப்பதியில் வராக சாமி கோவில் இல்லாததால் இஸ்கான் கோவில் மற்றும் தபாலில் தெரிவிக்கப்பட்டு இருந்த ஓட்டல்களில் வெடிகுண்டு கண்டறியும் கருவி மற்றும் மோப்ப நாய்களுடன் சோதனை நடத்தினர்.
சோதனையில் வெடிகுண்டு எதுவும் மீட்கப்படவில்லை. இதனால் இந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது.
தொடர் வெடிகுண்டு மிரட்டலால் திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் யாரும் வெடிகுண்டு மிரட்டல் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என, திருப்பதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
49 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
56 minute ago
1 hours ago