Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 செப்டெம்பர் 26 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கவுகாத்தி:
அசாமில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்து கீழே விழுந்து கிடந்த நபர் மீது புகைப்படப்பிடிப்பாளர் எகிறி குதித்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆக்கிரமிப்பு நிலங்களை அகற்றும் பணியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. முக்கியமாக கோவில் நிலங்கள், விவசாய நிலங்களில் வீடு கட்டி இருப்பவர்களின் ஆக்கிரமிப்புகளை அரசு அகற்றி வருகிறது.
அசாமில் டாரங் மாவட்டத்தில் இரண்டு கிராமங்களில் மொத்தம் 4500 பிகாஸ் ஆக்கிரமிப்பு நிலங்களை அரசு கைப்பற்றியது. அந்த கிராமங்களில் வசித்த 800 குடும்பங்களை அரசு வெளியேற்றியது. இதற்காக அரசு தரப்பு வீடுகளை இடிக்கும் போது அதற்கு எதிராக பொது மக்கள் போராட்டம் செய்ய, அந்த போராட்டம் பெரிய கலவரத்தில் முடிந்தது.
இந்த போராட்டத்தின் போது அங்கு இருந்த பொது மக்கள் பொலிஸார் மீது கற்களை வீசி தாக்கியதாகவும், குச்சிகளால் அடித்ததாகவும் கூறப்படுகிறது.
போராடும் பொது மக்கள் மீது பொலிஸார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. குச்சியை ஏந்தியபடி வயதான நபர் ஒருவர் ஓடி வந்த போது அவரை நான்கு பொலிஸார் அடுத்தடுத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் இரண்டு குண்டுகள் அவரின் நெஞ்சு பகுதியில் பாய்ந்தது. ஆனாலும் அவருக்கு உயிர் இருந்தது.
இதில் கொடூரம் என்னவென்றால் சுருண்டு விழுந்து கிடந்த அந்த நபரின் மீது புகைப்படப்பிடிப்பாளர் எகிறி குதித்து, அவர் மீது மாறி மாறி ஜம்ப் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரின் நெஞ்சிலே மாறி மாறி எகிறி குதித்துள்ளார். இது வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலில் இந்த நபர் செய்தி நிறுவனத்தின் புகைப்படப்பிடிப்பாளர் என்று கூறப்பட்டது. ஆனால் இவர் பிஜாய் சங்கர் பனியா என்று அடையாளம் காணப்பட்டார்.
இவர் அங்கு மாவட்ட நிர்வாகத்தின் அரசு தரப்பு புகைப்படப்பிடிப்பாளர் இவர் அங்கு ஆளும் கட்சியோடு நெருக்கமான தொடர்பு கொண்டவர். முக்கியமாக பொலிஸாருடன் நெருக்கமாக தொடர்பு கொண்டவர்.
https://twitter.com/i/status/1440999800187408388
9 hours ago
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
16 Aug 2025
16 Aug 2025