A.K.M. Ramzy / 2021 மே 25 , பி.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடில்லி
'மேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தலுக்குப்பின் நடந்த வன்முறை தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில், எட்டு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடந்தது. இதில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி 3வது முறையாக ஆட்சியைப்பிடித்தது. தேர்தல் முடிந்தபின் நடந்த வன்முறைச் சம்பவங்களில், 16 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமான பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் தாக்குதலுக்கு அஞ்சி வெளியேறினர்.
'இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும். தேசிய மனித உரிமைகள் ஆணையம், தேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் ஆணையம் ஆகியவற்றையும் மனுதாரரகச் சேர்க்க வேண்டும்' எனக் கோரி வழக்கறிஞர் பிங்கி ஆனந்த் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
'தேர்தலுக்கு பின் நடந்த வன்முறையால் பல ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்ததுள்ளனர். பொலிஸாரின் துணையுடன் திரிணமுல் காங்கிரஸ் கட்சியினரும், குண்டர்களும் சேர்ந்து மக்களைத் தாக்குகின்றனர். இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு உணவு, தங்குமிடம், மருத்துவம் போன்றவற்றை வழங்க உத்தரவிட வேண்டும்'' என மனுவில் கோரப்பட்டிருந்தது. இதேபோல் வழக்கறிஞர் அருண் முகர்ஜி உள்ளிட்ட 5 சமூக ஆர்வலர்கள் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வினீத் சரண், பி.ஆர்.காவே ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, 'மேற்கு வங்க அரசு உரிய பதில் மனுவை வரும் ஜூன் 7ஆம் திகதி தாக்கல் செய்ய வேண்டும். ஜூன் 2வது வாரத்தில் மனு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும்.
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago