A.K.M. Ramzy / 2021 மார்ச் 07 , மு.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு 6 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. தி.மு.க-காங்கிரஸ் இடையே நேற்று இரவு தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் இன்று ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க.வுடன் நடத்தப்பட்டு வந்த பேச்சுவார்த்தை விவரங்களை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் என்ன முடிவு எடுக்க போகிறது என்று அரசியல் வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த வருமாறு காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனை ஏற்று காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் ஆழ்வார்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு சென்றனர்.இந்த சந்திப்பின்போது தி.மு.க-காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது.
10 minute ago
17 minute ago
21 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
17 minute ago
21 minute ago
1 hours ago