A.K.M. Ramzy / 2020 நவம்பர் 18 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை,
நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தொடங்கிய அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற தனது கட்சியை பதிவு செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து விஜய் தரப்பிலிருந்து ஒரு அறிக்கை வெளியானது. அதில் தன்னுடைய ரசிகர் யாரும் அதில் சேர வேண்டாம் என கூறப்பட்டு அறிக்கை வெளியானது.
இந்நிலையில், எஸ்.ஏ. சந்திரசேகர் தொடங்கிய அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சியின் மாநில தலைவர் பொறுப்பில் இருந்து விஜய் ரசிகர் மன்ற தலைவர் பத்மநாபன் விலகுவதாகவும் கட்சியின் உறுப்பினராக தொடரப்போவதாகவும் அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டு உள்ளார்.
நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சி தொடங்கிய அ.இ.த.வி. ம.இ. கட்சியின் மாநிலத் தலைவர் பத்மநாபன் என்கிற திருச்சி ஆர்.கே.ராஜா ராஜினாமா செய்தது அக்கட்சி யினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே பொருளாளர் பொறுப்பில் இருந்து விஜயின் தாய் ஷோப விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .