Editorial / 2022 நவம்பர் 03 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன், தன்னை விடுவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் கடந்த மே.18ம் திகதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் , 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது. சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி அவரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ததது குறிப்பிடத்தக்கது.
பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து, மீதமுள்ள 6 பேர் விடுதலை தொடர்பாக கேள்வி எழுந்துள்ளது. இந்த தீர்ப்பை முன்னுதாரணமாக கொண்டு மற்ற 6 பேரும் தங்களை விடுதலை செய்ய கோர முடியும் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நளினி உள்பட 6 பேரை விடுதலை செய்யக் கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று இரவு விசாரணைக்கு வருகிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுக்கு மேலாக நளினி உள்ளிட்ட 6 பேர் சிறையில் உள்ளனர்.
பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 பேரும் விடுதலை கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செயதனர் என்பது குறிப்பிடத்தக்கது.
3 hours ago
9 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
09 May 2026