A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 10 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி:
தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. அதில் போதிய இடவசதியும் இல்லை.
எனவே, புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதைய கட்டிடத்துக்கு அருகிலேயே புதிய கட்டடம் எழுப்பப்படுகிறது.
இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கட்டுமான பணிக்கு தடை விதித்தது. இருப்பினும், பூமி பூஜை நடத்தலாம் என்று அனுமதி அளித்தது.
அதன்படி, புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டிடத்துக்கு இன்று (வியாழக்கிழமை) அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது.
பிரதமர் மோடி, அடிக்கல் நாட்டி வைக்கிறார். பூமி பூஜையையும் நடத்தி வைக்கிறார்.
மத்திய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு நாடுகளின் தூதர்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
சில மாநிலங்களின் ஆளுநர்கள்,முதலமைச்சர்கள் ஆகியோர் காணொளிகாட்சி மூலம் பங்கேற்கிறார்கள்.ரூ.971 கோடி செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்படுகிறது.
2022ஆம் ஆண்டுக்குள் கட்டுமான பணி நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4 minute ago
24 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
24 minute ago
29 minute ago