A.K.M. Ramzy / 2020 நவம்பர் 07 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகத்தைச் சீரமைப்பதே தன்னுடைய இலக்கு என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கூறியுள்ளார்.இது தொடா்பாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ள தானது;அனைவரின் அன்பான வாழ்த்துகளுடன் 66 ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறேன். கட்சிப் பணிகள், என் தொழில் சார்ந்த பணிகள் இவற்றோடு தமிழ் நாட்டைச் சீரமைக்கும் நல்ல காரியத்திலும் நான் தீவிரமாக ஈடுபட்டிருப்பதை அறிவீா்கள்.
நான் துணிந்த பின் தயங்குவதில்லை. தடைகள் கண்டு மயங்குவதில்லை. எதிர்ப்பு கண்டு கலங்குவதில்லை. என் வாழ்வின் ஆதாரமாகத் திகழ்ந்து என்னைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென நான் எப்போதோ முடிவெடுத்துத் துவங்கிய காரியத்தில் வேக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறேன்.
மக்கள் நலனே என் வாழ்க்கை நோக்கு. தமிழகத்தைச் சீரமைப்பதே நம் இலக்கு. கால் வைத்த துறைகளில் எல்லாம் உங்கள் உதவியுடன் வெற்றி கண்ட நான் வாழ்வின் முக்கியமான பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறேன். என்னுடன் உறுதுணையாக நில்லுங்கள்.
இப்போது இருக்கும் கொரோனா சூழல் கொண்டாட்டத்துக்கு உரியது அல்ல. நமக்கும் பல வேலைகள் காத்திருக்கின்றன. நற்பணி எனும் சொல்லையே நாற்பதாண்டுகளுக்கு முன் இந்தியச் சினிமா ரசிகா்களுக்கு அறிமுகம் செய்தவன் நான். என்னுடைய பிறந்த நாளை நற்பணி தினமாக அறிவித்து அன்றும் மக்களுக்கான நற்காரியங்களைச் செய்யுங்கள் என்று அவா் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .