2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

நாய், குட்டிகளை ஈன்றதால் ஆசிட் வீச்சு

Ilango Bharathy   / 2023 ஜனவரி 17 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 டெல்லியில், நாய் வளர்ப்புத்  தொடர்பாக எழுந்த தகராறில், அயலவர் மீது மூவர் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 உத்தம் நகரில், 50 வயதான நபர் ஒருவர்  நாயொன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் குறித்த நாயானது கடந்த சில நாட்களுக்கு முன்னர் குட்டிகளை  ஈன்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று குறித்த நபரின்   நாய்,  குட்டிகளை ஈன்றமை  தொடர்பாக  அவரது அயலவரான கமல் மற்றும் அவரது மகன்கள் இருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ஆத்திரமடைந்த கமல் , கழிவறையை சுத்தம் செய்யப்  பயன்படுத்தும் ஆசிட்டை தனது வீட்டின் மாடியிலிருந்து மீது வீசியதாகவும், இதில் நாய் உரிமையாளர் காயமடைந்துள்ளார் எனவும் தெரிவிக்க்பபட்டுள்ளது .

இந்நிலையில் கமல் ஆசிட் வீசும் காட்சியானது அப்பகுதியில் இருந்த சிசிடிவி

கமெராவில் பதிவாகியுள்ள நிலையில்,  அக் காட்சியை அடிப்படையாக வைத்து பொலிஸார் கமல் மற்றும் அவரது மகன்கள் இருவரையும் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .