Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Freelancer / 2023 ஓகஸ்ட் 20 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மலாட் பகுதியை சேர்ந்த துகாரம் என்பவர் பிரவுனி என்ற நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த நாய்க்கு திடீரென கண் அருகே காயம் ஏற்பட்டது. அது எப்படி ஏற்பட்டது என தெரிந்து கொள்வதற்காக துகாரம் தனது குடியிருப்பு பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை பரிசீலித்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த சபிஸ்தா அன்சாரி என்ற பெண் அந்த நாய் மீது ஆசிட் வீசியதைப் பார்த்து துகாரம் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
சபிஸ்தா தனது வீட்டில் பூனை ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார். அந்த பூனையுடன் துகாரம் வளர்த்து வந்த நாய் விளையாடுவது வழக்கம் என கூறப்படுகிறது. இதற்கு சபிஸ்தா எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சம்பவத்தன்று அவர் பூனையுடன் விளையாடிய நாய் மீது ஆசிட் வீசியது தெரிய வந்துள்ளது. இதனால் நாய் பிரவுனிக்கு கண் பார்வை இழந்ததோடு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டுள்ளது.
சபிஸ்தா அன்சாரி மீது விலங்குகளை கொடுமைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
17 minute ago
20 minute ago
45 minute ago