Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 23 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகின்றனர். சீமான் தனது கொள்கைகளில் இருந்து விலகி முன்னுக்குப்பின் முரணாக பேசி வருவதாக கட்சியில் இருந்து விலகியவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது.
நாம் தமிழர் கட்சியில் இருந்து 3,000 பேர் வெளியேறினர். 2021 சட்டசபை தேர்தல், 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நா.த.க. வேட்பாளர்களும் கட்சியில் இருந்து விலகினர்.
பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு காரணமாக ஏற்பட்ட அதிருப்தியால் நா.த.க.வில் மேலும் பலர் விலகியுள்ளனர்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய 3,000 பேர் நாளை (24), தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள், அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago