Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 மே 25 , பி.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் சென்ற பைக் மீது கார் மோதிய விபத்தில் கேரள மாநிலத்தை சேர்ந்த மாணவி அருணிமா(21) பரிதாபமாக உயிரிழந்தார்.
கேரள மாநிலம் கோழிகோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரேம்ராஜ். இவரது மகள் அருணிமா(வயது 21) புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு முதுநிலை கல்வி பயின்று வந்தார்.
மே 24-ம் திகதி நேற்று இரவு 12 மணியளவில் தனது நண்பரான விமல் மற்றும் அபிராமியுடன் தனது இருசக்கர வாகனத்தில் சென்றதாக கூறப்படுகிறது. ஆரோவில் கடற்கரை அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக இனோவா கார் மோதி மூவரும் தூக்கி வீசப்பட்டனர்.
விபத்தை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் மூவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி கேரள மாணவி அருணிமா உயிரிழந்தார். மேலும், அவரது நண்பர் விமல் மற்றும் அபிராமிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து கோட்டகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
25 minute ago
34 minute ago
38 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
34 minute ago
38 minute ago
42 minute ago