Freelancer / 2024 ஒக்டோபர் 31 , மு.ப. 08:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா– சீனா எல்லையில் படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை நிறைவடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - சீனா இடையே பல காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. இதனால் எல்லைகளைத் துல்லியமாக வரையறை செய்ய முடியாமல் இருக்கிறது.
அதற்குப் பதிலாக எல்.ஏ.சி. எனப்படும் எல்லை கட்டுப்பாடு கோடு நிர்ணயிக்கப்பட்டு, அவரவர் பகுதியில் இரு நாட்டு இராணுவமும் ரோந்து சென்று வந்தனர். அவ்வப்போது இந்தியப் பகுதிகளுக்குச் சீனா பெயர் வைப்பதும், தங்களது எல்லையில் குடியேற்றங்களை நிறுவுவதுமாக சீனா இருக்கிறது.
முன்னதாக கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு, லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் வைத்து இந்திய ரோந்து படை மீது சீன இராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியதால் நிலைமை இன்னும் மோசமாகத் தொடங்கியது. இந்த தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.
ஊடுருவிய நிலப்பகுதிகளிலிருந்து சீன இராணுவம் பின்வாங்க மறுத்து எல்.ஏ.சி. எல்லையை ஒட்டி கட்டுமானங்களை மேற்கொண்டு வந்தது.
இதையடுத்து, கடந்த 4 ஆண்டுகளாக இந்த பிரச்சினையைத் தீர்க்க இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்துவந்த நிலையில் புதிய ஒப்பந்தம் ஏற்பட்டுத்தப்பட்டது.
அதன்படி, 2020 ஜூன் மாதத்துக்கு முன் இருந்த உடன்பாட்டின்படி, இரு நாட்டு இராணுவமும் ரோந்து செல்ல உடன்பாடு ஏற்பட்டது. எனவே எல்லையில் இருந்து இரு நாட்டு படைகளும் முன்பிருந்த முகாம்களின் துாரத்துக்கு பின்னோக்கி செல்லும் நடவடிக்கை தொடங்கின.
இந்த நடவடிக்கை தற்போது முடிவடைந்து விட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, சீனத் தரப்பால் கட்டமைப்புகள் அகற்றப்படுகின்றன என்பதை நிரூபிக்கும் முதல் செயற்கைக்கோள் படங்களும் வெளியாகியுள்ளது.
இதற்கான முறையான அறிவிப்பு வந்த பின்பு 2020 மே மாதத்துக்கு முன்பு இருந்தது போல், எல்லையில் ரோந்து பணிகளில் இராணுவம் மீண்டும் ஈடுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
37 minute ago
41 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
41 minute ago
2 hours ago
2 hours ago