2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

பட்டாசுக் கடையில் விபத்து;நால்வர் மாயம்

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 16 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவகாசி :

சிவகாசியில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில், வீடுடன் கூடிய கட்டடம் தரைமட்டமான சம்பவத்தில்  இருவர் காயமடைந்தனர். இடிபாடுகளில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தால், ஜே.சி.பி., இயந்திரங்கள் உதவியுடன் மீட்பு பணிகள் இடம்பெற்றன.

 சிவகாசி ரிசர்வ்லைன் நேருஜி கொலனியில், மதுரை, கோரிப்பாளையத்தைச் சேர்ந்த ராமநாதன், 44, என்பவருக்கு சொந்தமான பட்டாசு பேப்பர் குழாய் தயாரிக்கும் கம்பெனி, பட்டாசு கடை, வீடு என்பன ஒரே கட்டடத்தில் உள்ளன. இரண்டு மாடி கட்டடத்தில்,   பேப்பர் குழாய் தயாரிக்கும் இடமாகவும், மாடியில் வீடும் இருந்தது. கடையில் அனுமதியின்றி பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்தன.

நேற்று பேப்பர் குழாய் தயாரிக்கும் பணி நடந்தது. நான்கு பேர் வேலை செய்தனர்.  கடையில் அதிகளவு பட்டாசுகள் வைத்திருந்த நிலையில், உராய்வு காரணமாக மதியம் 3:45 மணிக்கு பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. அங்கு வேலை பார்த்த இருவர் காயமடைந்து  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் தகவல்படி, கட்டடத்தின் உள்ளேஇரண்டு பெண்கள் சிக்கியிருப்பது தெரிந்தது.

அதேபோல் கட்டட உரிமையாளர் மற்றும் அவரது மனைவி   குறித்தும் தெரியவில்லை. நான்கு ஜே.சி.பி., இயந்திரங்கள் உதவியுடன் மீட்பு பணிகள் நடைபெறும் நிலையில், இடிபாடுகளை முழுமையாக அகற்றிய பின்பே, அவர்கள் நிலை தெரியவரும். தீயணைப்பு வீரர்கள், மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .