Freelancer / 2025 பெப்ரவரி 24 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இமாச்சலபிரதேசத்தில், பனிச்சரிவில் சிக்கி ரஷ்ய சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ரஷ்யாவை சேர்ந்த டேனியல் பார்பர் (வயது 58) என்பவரே, இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இமாச்சலபிரதேசத்திற்கு சுற்றுலா வந்த அவர், சனிக்கிழமை (22), குலு மாவட்டம் , மணிலாவில் கோதை பகுதியில் சக சுற்றுலா பயணிகள், உள்ளூர் பனிசறுக்கு வீரர்களுடன் இமயமலையில் பனிச்சறுக்கு சாகசத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் குறித்த நபர் சிக்கிக்கொண்டார்.
இதையடுத்து, அவரை உள்ளூர் பனிச்சறுக்கு வீரர்கள் மீட்டு, ஹெலிகொப்டர் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த வைத்தியர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago