2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

பனிப்பாறைகள் உருகி வெள்ளம்: 10 பேர் பலி

A.K.M. Ramzy   / 2021 பெப்ரவரி 08 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தரகாண்ட்;

உத்தரகாண்ட்டில் பனிப்பாறைகள் உருகி நதியில் பெருவெள்ளம் ஏற்பட்டதில் 10 பேர் பலியாகினர். 125 பேர் மாயமகினர்.

உத்தரகாண்ட்டில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதன்காரணமாக சமோலி மாவட்டத்தின் அலக்நந்தா மற்றும் தவுலிகங்கா நதிகளில் பனிச்சரிவும் கடும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. மேலும் அருகில் உள்ள ரிஷிகங்கா மின் திட்டப் பகுதிகளில் வெள்ளம் பாய்ந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதில் தபோவன் பகுதியில் ரெய்னி கிராமத்தில் அமைந்துள்ள தேசிய அனல்மின் நிலையம் அருகே ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் தொழிலாளர்கள் பலர் சிக்கிக் கொண்டனர். இதில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிகிறது. 125 பேர் காயமடைந்தனர்.

தொடர்ந்து அப்பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 3 குழுக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.நதிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துவருவதால் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள ரிஷிகங்கா மின் திட்டமும் வீடுகளும் முற்றிலும் சேதமடையும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் அவசரஅவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதில் நூற்றுக்கணக்கானோர் இன்னும் சிக்கித் தவிக்கக்கூடும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .