2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

போபாலில் யாசகம் எடுக்க தடை

Freelancer   / 2025 பெப்ரவரி 04 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய பிரதேச மாநில தலைநகரான போபாலில் யாசகம் எடுப்பதும், யாசகம் போடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான அறிவிப்பை போபால் மாவட்ட ஆளுநர், திங்கட்கிழமை (3) மாலை வெளியிட்டார்.

இதன்படி, போபாலில் இனி யாசகம் போடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிச்சை எடுப்பவர்களை மீட்டு, அவர்களை தங்க வைக்க போபாலில் உள்ள கோலார் சமூக சுகாதார மையத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், ஆளுநர் கூறினார்.

 முன்னதாக கடந்த ஆண்டு இந்தூர் நகரிலும் யாசகம் எடுக்க தடைவிதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X