2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பருவமழைக்கு இதுவரை தமிழகத்தில் 105 பேர் பலி!

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 29 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை;

'வடகிழக்கு பருவமழைக்கு, தமிழகம் முழுதும் இதுவரை 105 பேர் பலியாகியுள்ளனர்' என, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச் சந்திரன் தெரிவித்தார்.

சென்னை எழிலகத்திலுள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில், நேற்று ஆய்வு மேற்கொண்ட அவர் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது, தமிழகத்தில்  தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திருவாரூர், சென்னை, இராமநாதபுரம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிக மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை, இம்மாதம் 27ஆம் திகதி  வரை பெய்துள்ளது. இது வழமையைவிட 76 சதவீதம் கூடுதல்.

மாநிலம் முழுதும் 188 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏழு நிவாரண முகாம்இங்கு, 15 ஆயிரத்து 16 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 சென்னையிலுள்ள ஏழு நிவாரண முகாம்களில்  1,048 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.வடகிழக்கு பருவ மழைக்கு இதுவரை 105 பேர் பலியாகி உள்ளனர்.

அதுமட்டுமின்றி, 2,943 கால்நடைகளும் இறந்துள்ளன. மொத்தம் 1,814 குடிசைகள், 310 வீடுகளும் சேதம் அடைந்துள்ளன என தெரிவிக்கப்படுகிறது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .