2025 ஜூலை 19, சனிக்கிழமை

பறக்கும் விமானத்தில் மலம், சிறுநீர் கழிப்பு

Freelancer   / 2023 ஜூன் 27 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பறக்கும் விமானத்தில் இருக்கையிலேயே மலம், சிறுநீர் உள்ளிட்ட இயற்கை உபாதைகளை கழித்து தகராறு செய்த நபரை புதுடெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.

 ஜூன் 24ஆம் திகதியன்று ஏர் இந்தியாவின் AIC 866 விமானம் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இருந்து புறப்பட்டு புதுடெல்லி சென்றது. இந்த விமானத்தில் ராம் சிங் என்ற பயணியும் சென்றுள்ளார். ஆப்ரிக்க நாடு ஒன்றில் சமையல்காரராக இவர் பணியாற்றி வருகிறார்.

இவர் அந்த ஏர் இந்தியா விமானத்தின் 17F இருக்கையில் அமர்ந்து சென்று வந்த நிலையில், விமானம் நடு வானில் பயணித்துக் கொண்டிருந்த போது பயணிகள் இருக்கைகள் இருக்கும் பகுதியிலேயே மலம், சிறுநீர் கழித்தார். அத்தோடு, எச்சில் துப்பி அருகே உள்ள நபர்கள் அருவருக்கும் வகையில் நடந்து கொண்டார். இவரின் செயல்களால் அதிர்ச்சி அடைந்த விமான ஊழியர்கள் சூப்பர்வைசருக்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனடியாக பயணிக்கு எச்சரிக்கை கொடுத்தார்.

அத்துடன் விமான கேப்டன் மற்றும் ஏர் இந்தியா நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தார். புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையித்தில் விமானம் தரையிறங்கும் போது காத்திருந்த பாதுகாப்பு அதிகாரிகள் பிரச்சனை செய்த பயணி ராம் சிங்கை கைது செய்தனர். அவர் மீது  வழக்கு பதிவு செய்யப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X